இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு எல்லையற்ற ஆசைகள் அவரவர் மனதில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இதை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் எந்த ஒருவகையிலாவது இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து விடமாட்டோமா என்ற எண்ணம் மக்கள் மனதில் இருப்பது இன்றியமையாததே...
சொல்லபோனால் இந்த எண்ணம் இயற்கையானதே.. ஆனால் அதே சமயம் என்றாவது ஒருநாள் நாம் விண்ணுலகம் சென்றாக வேண்டும் என்பதும் இயற்கையானதே!
இதில் புரிதல்,உணர்தல் என்ற இருவகையான பிரிவில் மக்கள் உலவாடிக்கொண்டு இருக்கிறார்கள். புரிந்துகொண்ட மனிதர்கள் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். உணர்ந்தவர்கள் அதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இந்த இருவகைக்கும் அப்பாற்பட்ட ஒரு வகையும் உண்டு. இந்த இயற்கையை தன்வயம் எடுத்துக்கொள்ளுதல் (take over).
இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அவ்வாறு ஒரு விஞ்ஞானி தன் வாழ்க்கையின் நினைவுகளை ஒரு hard disk-ல் பதித்துக்கொண்டு வேறு ஒருவரின் நினைவுகளை அழித்து அவன் வாழ்க்கையை வாழ்கிறான். இந்த மாயமான பின்னணியை உடைய மாயாஜால மனிதனை குறித்த கதைதான் மாயவன்.
இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அவ்வாறு ஒரு விஞ்ஞானி தன் வாழ்க்கையின் நினைவுகளை ஒரு hard disk-ல் பதித்துக்கொண்டு வேறு ஒருவரின் நினைவுகளை அழித்து அவன் வாழ்க்கையை வாழ்கிறான். இந்த மாயமான பின்னணியை உடைய மாயாஜால மனிதனை குறித்த கதைதான் மாயவன்.
இப்படிப்பட்ட சிந்தனை நம் தமிழ் சினமாவிற்கு புதுமையான முயற்சியே. இந்த மாதிரியான செயல்கள் சாத்தியமா? இதுவும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது! இருந்தாலும், இந்த படமானது புதுவிதமான அமைப்பை கொண்டுள்ளது. முயற்சிகளை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
இந்த கதை மிகவும் எதிர்கால தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது என்று பலபேர்கள் சொல்வதை பார்த்தேன். இருக்கலாம், இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்தகாலத்தில் வாழும் மனிதர்களில் பாதிபேர் இந்த வகையான நினைப்புகளை கொண்டுள்ளார்கள் என்று தான் சொல்வேன்.
கதையானது, மிகவும் அவசியமான ஒரு கருத்தையே எடுத்துவைக்கிறது. சொன்னார் போல் எதிர்கால தன்மையைக் கொண்டு இருந்தாலும், சி.வி.குமார் நல்ல கதையே எழுதியுள்ளார்.ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் மனம் ஒற்றுப்போக மறுக்கிறது.
திரைக்கதை முதலில் புரியாத வண்ணம் ஆரம்பித்தாலும் 30 நிமிடங்களுக்கு பிறகு கதைக்குள் செல்வதை உணரமுடிகிறது. நலன் குமாரசாமி நல்ல ஆர்வமான திரைக்கதை அமைத்து இருந்தாலும், சில காட்சிகளுக்கு நியாயப்படுத்தாமல் போனது மக்களின் மனதை ஒருவகையான குழப்பத்திற்கு உள்ளாகிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் சில இடங்களில் பின்னணி இசையை அழகாகவே அமைத்துள்ளார். இருந்தாலும் , ஓரிரு பாடல்கள் இந்தவகையான படங்களுக்கு சுவாரிசியத்தை தடுக்கிறது. சில இடங்களில் பல வகையான தனிச்சிறப்புகளை உடைய இசையையும் செவிகள் கேட்க மறுக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இயக்குநரின் கற்பனையை கண்வழி காட்டுகிறார். படத்தொகுப்பு நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் சுருக்கமாகவும் கட் பண்ணியிருக்கலாம்.
சந்தீப் கிசன் தன் போலீஸ் கதாபாத்திரத்தை தக்க உணர்ச்சிகளுடன் வெளிப்படித்தியுள்ளார். இருந்தாலும் இன்னும் ஒப்பனையில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. ஒட்டு மீசை கதையுடன் ஒட்டவில்லை. தவிர்த்து, சண்டை காட்சிகளில் உழைப்பு தெரிகிறது.
மற்ற கதாபாத்திரங்களும் தங்களின் பங்களிப்பை இந்த கதையின் தேவைக்கேற்ப கொடுத்துள்ளனர். இதில் டேனியல் பாலாஜி மற்றும் ஜாக்கி செராப் குறிப்பிடத்தக்கவர்கள்.
மொத்தத்தில், இந்த படைப்பு தமிழ் சினிமாவிற்கு வரவேற்புடையதே. கடைசியில் இந்த வகையான ஆராய்ச்சிகள் குறித்து காட்டுவது கதையை நியாயப்படுத்தியது.
மாயவன் ஒரு மாயாஜால மேடை !
மாயவன் ஒரு மாயாஜால மேடை !
- - - - × - - - - × - - - - × - - - -
Super bharathi keep it up frst introduction to the review is awesome
பதிலளிநீக்கு❤️
நீக்கு