Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

வெள்ளி, 22 டிசம்பர், 2017

வேலைக்காரன் - 'தாய்' நாவலின் கிளர்ச்சி !

தொடக்கத்தில் மெதுவாக கதைக்குள் அடியெடுத்து வைத்தாலும்,முதல் பாதி கதையோடு ஒருங்கிணைவதற்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதியில் என்னை அறியாமல் நான் படத்தோடு ஒன்றினேன். அதற்கு முக்கியமான காரணம், இந்த படமானது என்னை மாறியும், உங்களை மாறியும் ஒரு வேலைக்காரனின் கதையாவதால்.... இதுவே, இந்த படத்தின் வெற்றியென கருதுகிறேன்.

இந்தப்படத்தை பார்த்தவுடன் எனக்கு மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்ட தாய் நாவல் ஞாபகத்திற்கு வந்தது.. ஆனால் இது அந்த கதையை குறிக்கிறது என்று சொல்ல வரவில்லை. அந்த நாவலில் பாவெல் எப்படி தன் தாயிடம் தன் கருத்துக்களை கொண்டு அவளை ஈர்க்கிறானோ, அதேபோல அனைத்து வேலைக்காரர்களையும் ஈர்ப்பதே இந்தப்படம்.

இந்த நவீன வாழ்க்கையில் நாம் நம் உழைப்பை மட்டும் நம்பி வாழ்கிறோம். அதற்க்காக எதையும் செய்ய தயாராகவும் உள்ளோம். இந்த நிலையில் இருக்கும் நாம், நம்மை வேலைக்காரனாக மட்டுமே பார்க்கிறோம். நாம் வெறும் 8 மணி நேரம் மட்டுமே வேலைக்காரனாக இருக்கிறோம். மற்ற நேரத்தில் நுகர்வோராகவே வாழ்கிறோம்.

இந்த நிலையில் இருந்து நாம் செய்யும் வேலைக்கு நாமே நுகர்வோராகும் நிலையை குறித்து யோசிக்க வைக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. எப்படி தாய் நாவல் ஒரு புரட்சிக்கு விதையாக அமைந்ததோ, அதேபோல் இந்தப்படம் நாம் செய்யும்
வேலையின் மாற்றத்தின் புரட்சிக்கு ஒரு சாம்பிளாக அமையும் என்று மோகன் ராஜா நம்புகிறார்.

பல குறிப்புகளை சேமித்து இந்த கதையை எழுதியுள்ளார் என்று படத்தில் தெரிகிறது. ஆனாலும் கதையின் முதல் பாதி சற்று அதிகமாக உள்ளது போல உணர்ந்தேன். பல உதவி இயக்குநர்கள், பல்வேறு நடிகர்கள், பல தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களிடம் வேலைவாங்கி நல்ல வேலைக்காரன் என்ற பட்டத்தை வென்றுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

அடுத்த இடத்தை கலை இயக்குநர் முத்துராஜ் பெறுகிறார். மிக தத்ரூபமான செட்டுகளை
அமைத்துள்ளார். அடுத்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், இவர் அமைத்த பின்னணி இசைதான் ஒரு கட்டத்தில் படத்தை ஏற்றி நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜி கதைக்கு தேவையானதை அழகாக கொடுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ரூபன் , முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருந்தால் இன்னும் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.

கதாப்பாத்திரங்கள் என்று வந்தால் முதல் இடத்தை புடிக்கிறார் பகத் பாசில். தனது புத்திசாலித்தனம் கலந்த வில்லாதனத்தை மிக எதார்த்தமாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் தனிஒருவன் படத்தில் வரும் சித்தார்த் அபிமன்யூ என்னும் அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை நினைவூட்ட மறுக்கவில்லை.

சிவகார்த்திகேயன் பொதுவாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிப்பவர் என்று மக்கள் அவர்மீது வைத்திருந்த பார்வையை இந்தப்படத்தில் உடைத்துள்ளார். தன் அறிவு கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டு நடித்துள்ளார்.

நயன்தாரா தனக்கு கொடுத்த திரைப்பகுதியில் தனது சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தை அழகாக நடித்து கைதட்டல்களை பெறுகிறார். சினேகா தன் நடிப்பில் இத்தனை ஆண்டு காலம் தனக்கு கிடைத்த முதிர்ச்சியை முத்திரை பதிக்கிறார்.

இதையடுத்து பிரகாஷ்ராஜ், விஜய்வசந்த், சார்லீ, ரோகினி, R. J.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ் போன்ற அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை கதாபாத்திரத்திற்கு ஏற்ப கொடுத்துள்ளனர்.

இந்த மாதிரியான படைப்பினை உருவாக்க உறுதுணையாக இருந்த 24AM ஸ்டுடியோ நிறுவனத்தின் மேலாளர் திரு. R.D ராஜா அவர்களுக்கு பாராட்டுகள்.

தன் முதலாளிக்கு கொடுக்கும் விசுவாசத்தை வேலையில் செலுத்தி பார்க்க சொல்லும் முயற்சியே வேலைக்காரன் !

1 கருத்து:

Review

விண்மீனே..