நிமிர் திரைவிமர்சனம்
நாம் இயங்கும் இந்த வேகமான வாழ்வில், சுலபமாகவும் குளிர்ச்சியாகவும் கிடைதற்குரிய எண்ணற்ற மற்றும் புரிதல்களுக்கு உரிய பல அன்றாட நிகழ்ச்சிகளை கவனிக்க மறந்து போகிறோம்.
பறந்து விரிந்த வானமாயினும் சரி, சவங்களை குவிக்கும் மாயானமாயியும் சரி, எல்லாவற்றிலும் நாம் உணரக்கூடிய பல புரிதல்களை வாழ்க்கை ஓட்டத்தில் விட்டு விடுகிறோம்.
இவ்வகை புரிதல்களை நாம் காசு கொடுத்து ஒன்றும் வாங்க போவதில்லை. ஆனால் உணர்தலால் வாழ்க்கை பற்றிய புரிதல்கள், மனதில் மட்டுமல்ல கண்களிலும் விருந்தளிக்க தவறுவதில்லை.
இவ்வகை புரிதல்கள் எந்த வயதிலும் ஒருவனின் மூளைக்கு எட்ட வரும். ஏன், எட்ட வராமலும் கூட போகலாம். ஒரு சிறந்த தந்தையின் வளர்ப்பு என்பது நல்லது கெட்டதை மட்டும் கற்றுக்கொடுப்பதல்ல. தந்தையானவன், வாழ்க்கையைப் பற்றிய புரிதலும், அவை தன் மகனுக்கு உணர ஒரு ஊன்றுகோளாகவும் இருத்தல் வேண்டும்.
அந்த வகையில் அமைந்த கதையாக அமைகிறது நிமிர்.
மகேந்திரன் அவர்களின் அழுத்தமான கதாபாத்திர அமைப்பும் , அவரது நடிப்பும் என் மனதை உள்ளுர கவரந்தது. ஒருவனின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் சக்தி இந்த இயற்கைக்கு உள்ளது என்ற சொல்லை நிரூபிக்கிறது.
நகரங்களில் வசிக்கும் இந்த வாழ்க்கையை விட்டு ஒரு இரண்டு மணிநேரம் அழகான கிராமத்திற்கு விருந்தினராக அழைத்து சென்று இயற்கையை விருந்தளிக்கிறது நிமிர்.
Maheshinte Prathikaaram என்ற ஒரு மலையாள படத்தின் ரீமேக் தான் நிமிர். ரீமேக் படம் தானே என்ற இந்த படத்தை தவிர்க்க முடியாது. பொதுவாக ரீமேக் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. அசல் படம் போல வரவில்லை என்றாலும் அந்த படத்தின் பெயரை கெடுக்காத வண்ணம் அமைந்தாலே போதும் என்று கஷ்டப்படும் இயக்குநர்கள் பலருண்டு.
அவ்வகையில் அமைந்த படமே நிமிர்.
இயக்குநர் பிரியதர்ஷன் அந்த படத்திற்கு ஒரு கேடு வராத வண்ணமே படத்தை முடித்துள்ளார். பல மலையாள படங்களை எடுத்த இவருக்கு இந்த தமிழ் படம் ஒரு புது அனுபவமாகவே அமைந்திருக்கும்.
பச்சை பசேலென்று இருக்கும் கிராமங்களிலும் கூட பல்வகை வண்ணங்களை திரைக்கு கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கதை ஒரு சிறிய பிரச்சனையை நோக்கி மெதுவாக நகர்ந்தாலும், தனது மிருதுவான படத்தொகுப்பின் மூலம் மேலும் அழக்கூட்டுகிறார் படத்தொகுப்பாளர் அய்யப்பன் நாயர்.
பின்னணி இசையின் மூலம் கதையை விறுவிறுப்பாக மாற்றுகிறார் ரோனி ரபேல்.
பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையையும், நகரும் இடத்தையும் அறிந்து இசையமைத்துள்ளார் தர்புக்கா சிவா.
பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையையும், நகரும் இடத்தையும் அறிந்து இசையமைத்துள்ளார் தர்புக்கா சிவா.
பொதுவாக சமுத்திரக்கனி படத்தில் வசனங்கள் அனைத்தும் நேராகவும், குறிப்பாகவும் இருக்கும். இந்த படத்தில் தேவையான இடத்தில் மட்டும் கருத்துக்களை அச்சிடுகிறார்.
குணச்சித்திர பாத்திரம் என்றாலும், 8 தோட்டாக்கள் படத்திற்கு அடுத்து ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் M.S.பாஸ்கர். தப்பு செய்தாலும் வெள்ளந்தியாக வாழும் கருணாகரன் பாத்திரம் ஒரு தப்பான கண்ணோட்டத்தை வெளி நகர்த்துகிறது.
பார்வதி நாயர் முதல் பாதியில் தோன்றி கதாநாயகன் வாழ்க்கை இரண்டாம் பகுதியில் மாற்ற வழிவகுக்கிறார். நமிதா ப்ரமோத் தமிழில் அறிமுகமானாலும் தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் பார்வையாளரை கவர்கிறார்.
பகத் பாசில் அளவிற்கு நடிக்கவில்லை என்றாலும், முந்தைய படங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் முன்னேறி உள்ளார். மனிதன் திரைப்படத்திற்கு அடுத்து இந்த திரைப்படம் உதயநிதி படங்களின் வரிசையில் ஒரு அழுத்தமான இடத்தை பதித்துள்ளது.
நிமிர் - வாழ்க்கையில் ஒளிந்துள்ள இயற்க்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக