Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

சனி, 30 டிசம்பர், 2017

உள்குத்து திரை விமர்சனம்!

அனைத்து டான் கதைகளில் பார்க்கப்படும் ஒரு கொடிய கதாபாத்திரத்தை எதிர்த்து தன் சொந்த பிரச்னைக்கு போராடும் இளைஞனின் கதையை கூறுவதே உள்குத்து.

ஒருவன் தன்னை ரௌடி என்று சமூகத்தில் அடையாள படுத்திக்கொள்வதில் வெட்கப்படுகிறான். அவ்வாறு ஏன் காசுக்காக மற்றவரை அடித்து, கொன்று சம்பாதிக்க வேண்டும் ? என்ற கேள்வியை எடுத்து வைக்கிறது.

இவ்வகையான திரைப்படங்கள் நிறைய வெளிவந்த போதிலும் இந்தப்படத்தில் சில தனித்துவங்கள் உள்ளன என்று கூறலாம். இது ஆக்ஷன் படம் என்றாலும் இந்த படத்தை கொஞ்சம் சலிப்பூட்டாமல் எடுத்து கொண்டு போவது பால சரவணனின் நகைச்சுவை காட்சிகளே..

இயக்குநர் கார்த்திக் ராஜூ, இந்த கதையை எடுத்துக்கொண்டு தன் திரைக்கதையால் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தியுள்ளார். இருந்தாலும் நடுவில் இரண்டு பாடல் காட்சிகளில் தூக்கம் வந்துவிடுவது மறுக்கமுடியாத உண்மை..

ஜஸ்டின் பிரபாகரனின் இசை, பின்னணி நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் காட்சிகளை உயர்த்தி பதிவுசெய்கிறது. ஒளிப்பதிவாளர் R.K. வர்மா கதைக்கேற்ப காட்சிகளை அமைத்துள்ளார். ஆனாலும், நிறைய ஹெலிகாப்டர் , ஏரியல் ஷாட் வைத்து இருப்பது போல தோன்றியது.
படத்தை சுருக்கமாக தொகுப்பமைத்த படத்தொகுப்பாளர் பிரவீன் K. L க்கு பாராட்டுக்கள்.

நந்திதா ஸ்வேதா -க்கு திரையில் வரும் வாய்ப்பு கம்மிதான். இதற்கு மேலாக, துணை கதாபாத்திரங்களாக நடித்த ஜான் விஜய் மற்றும் ஸ்ரீ மான் ஆகியோர், தங்களது முத்திரையை பதித்துவிடுகிறார்கள்.

அட்டக்கத்தி தினேஷ் தன் முரட்டுத்தனமாக நடிப்பை மிக எதார்த்தமாக காட்டியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் சில சினிமாதனமான விஷயங்கள் நடந்தாலும் இவர் சமாளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவன் அமைதியாக இருப்பதால் அவன் கோழை இல்லை!
ஒருவனை அடித்ததால் கெத்து வராது! தன் குடும்பத்தை காத்தால் தான் வரும் கெத்து! இதை சொல்கிறது உள்குத்து!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Review

விண்மீனே..