தவறு ஆசிரியனாகும் போதுதான் மனநிலைத் தெளிவுறும்..
தப்பைமட்டுமே
செய்பவனுக்குத்
தப்பு எதுவென்று
தெரியாதம்மா -
தப்பைப்பார்த்தே
வளர்ந்தவனுக்குத்
தப்பைத் தவிர்த்து
வேறுதெரியாதம்மா -
தப்பைத்தவரிச் செய்து
கடலில் தத்தளித்துப்
போர்தொடுத்து
நற்கரையினைத் தொட்டபின்பு
மீண்டும் அக்கரையினைத்
தொடவிரும்பல் ஆகாதம்மா -
கடற்கும் கரைக்கும்
தான் பொதுவென்றுரைத்து
மாற்றங்கொண்டிடத்திற்
தெளிவது ஏதம்மா -
அக்கரையிலிருக்கும் தூதர்
கரையினிருப்பவரைப் பாராமல்
கடலில் தத்தளித்தவர்களைப்
பார்த்தநொடியில்
கடலின் ஆழத்தைத்
தொட்டு ஓங்கினால்
அக்கரையொரு கட்டுப்பாடாகாதம்மா -
கரைவளம் பலவுண்டு
காட்டிடத்தே தேனுண்டு
படகெதற்க்கு எனக்கொன்று
என்றானவன் -
அவனே ! அடியன் வளங்கொண்டான்
என்றே -
பயணம் புதுவித
வாழ்கொடுக்கும்
படகினைப் புதுமுயற்சி
எனநீ சித்தரித்தால்
உடையோன்
உடையோனல்லன் - தனியோன்
தேய்ந்தோனல்லன்
நீ!
கடலைத் தாண்டவே -
புதியன் பார்க்க
பிறஅதலஞ்செல்வாய் -
பிற அதலம்
என்றுரைத்தேனே -
அதைத் தெளிவின்மை
யேன்றெண்ணாதே
ஆனாலும்
ஓர் தெளிவின்மையிலே
சுழழு திவ்வகம் !
அது பொய்யோ ?
- ஹிரன் முருகேசன்
Idhil unnilai edhu
Thappai mattume
Seiybavanukku
Thappu yedhuvendru
Theriyaadhamma
Thappai Paarthe
Valarndhavanukku
Thappai thavirthu
Veru theriyaadhamma
Thappai thavari
Seidhu kadalil
Thaththaliththu
Por thoduthu
Narkarayinai
Thottapinbu
Meendum akkaraiyinai
Thoda virumbal aagadhamma
Kadarkkum karaikkum
Thaan podhuvendruraithu
Maatram kondidathir
Thelivadhu yedhamma
Akkarayil irukkum
Thoodhar
Karaiyil iruppavarai
Paaraamal
Kadalil
Thaththaliththavargalai
Paartha
Nodiyil
Kadalin aalathai
Thottu Onginaal
Akkarai Yoru
kattuppaadaagaadhamma
Karaivalam Palavundu
Kaattidathe thenundu
Padagedharku enakkondru
Yendraanavan
Avane adiyan
valangondaan endre
Payanam
Pudhu vidha
Vaalkodukkum
Padaginai pudhuMuyarchi
yena ni siththarithaal
Udayon
Udayon allan
Thaniyon
Theiyndhon allan
Ni
Kadalai thaandave
Pudhiyan paarkka
Pira adhalanjelvaay
Pira adhalam
Endru uraithene
Adhai thelivinmai
Yendrennaadhe
Aanaalum
Oor thelivinmaiyile
Sulaludhu ivvagam
Adhu poiyyo?
- Hiran Murugesan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக